நாட்டில் பாரம்பரிய தேசிய மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கும் வகையில், 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சரினால் இதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி மருத்துவ முறைகளை மேலும் அபிவிருத்தி செய்யவும், துறை சார்ந்த ஒழுங்குமுறைகளை பலப்படுத்தவும் இந்தச் சட்டத் திருத்தம் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
