மொரட்டுவை – சொய்சாபுர பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று இரவு 8 மணி 20 நிமிட அளவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சொய்சாபுர பகுதியில் உள்ள கடையொன்றில் நின்றுகொண்டிருந்த நபரைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் குறித்த கடையின் உரிமையாளர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாகக் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
