கொட்டகலை பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் தவிசாளர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
இதில் சுகாதார, நீர் வழங்கல் மற்றும் வீதிப் பராமரிப்புப் பிரிவுகளின் ஊழியர்கள், சாரதிகள், காவலாளிகள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்குத் தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்களால் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து விஜயதசமி தினத்தை முன்னிட்டு பிரதேச சபை உத்தியோகத்தர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் உபதவிசாளர், சபை உறுப்பினர்கள் மற்றும் சபையின் செயலாளர் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

