2026 ஒக்டோபர் 24ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு, அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. இத் தொகுதி பெரும்பாலும் அதே பிரதேசத்தில் நீடித்து, இன்று (24) ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அதன் பின் அது மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து, ஒக்டோபர் 25ஆம் திகதியளவில் ஒரு ஆழமான தாழமுக்கமாகவும், ஒக்டோபர் 26ஆம் திகதி காலையளவில் மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு புயலாகவும் வலுவடையக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
இக்கட்டமைப்பினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் எதுவும் இல்லை என்றபோதிலும், அக்கட்டமைப்பை நோக்கி வீசப்படும் காற்று நாடு முழுவதும் வீசுவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் வரும் சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு அண்மையாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்குத் திசையில் இலங்கையை விட்டு விலகி நகர்ந்து கொண்டிருக்கின்றது. எனினும் இத் தொகுதியின் தாக்கம் இன்றும் தொடர்ந்து காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
