லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை மற்றும் தியனீலக்கலை தோட்டங்களில் இன்று முற்பகல் இடம்பெற்ற இரு வேறு குளவிக் கொட்டுச் சம்பவங்களில் 22 பேர் பாதிக்கப்பட்டு லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த 15 பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதுடன், தியனீலக்கலை தோட்டத்தைச் சேர்ந்த 6 ஆண்களும் அடங்குகின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 9 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஏனையோருக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
