நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லங்கா ஐ.ஓ.சி (Lanka IOC) நிறுவனம் 95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை 475 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது
