கொழும்பு, மருதானை டெக்னிகல் சந்தி பகுதியில் இணையதளம் ஊடாக ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 21 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதானை பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடமொன்றில் இடம்பெற்று வந்த இந்த மோசடி நடவடிக்கையில் சீனா, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் உயர் பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
