ஹட்டன் நகருக்கு வாழைத்தார்களை ஏற்றி வந்த லொறி ஒன்றில் நாக பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஹட்டன் வர்த்தகப் பகுதிகளில் நாக பாம்பு மற்றும் கட்டுவிரியன் போன்ற நச்சுப் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நகருக்குள் பாம்புகள் நடமாடுவதைக் கட்டுப்படுத்தவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
