”கண்டி, கட்டுகஸ்தோட்டை – குடுகல பகுதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் டயர் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சொத்துச் சேதங்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.”
