நானுஓயாவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 28 பேர் காயம்
நுவரெலியா:
நுவரெலியா – தலவாக்கலை ஏ7 பிரதான வீதியின் நானுஓயா, டெஸ்போட் பகுதியில் இன்று (14) முற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 28 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த பேருந்தும், நுவரெலியாவிலிருந்து அகரபத்தனை நோக்கிப் பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று முற்பகல் சுமார் 11 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கௌசல்யா
