Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

November 28, 2026

நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

November 27, 2026

திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

November 27, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!
Breaking

தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

ThanaBy ThanaNovember 28, 2026Updated:November 28, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

ஹ்வாசொங் (தென் கொரியா): தென் கொரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அங்கு தொழில்புரிந்து வந்த இரண்டு இலங்கை இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்களில் ஒருவர் மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த திருமணமான இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.

தென் கொரியாவின் கியோங்கி மாகாணத்திலுள்ள ஹ்வாசொங் (Hwaseong) நகரில் கடந்த 26ஆம் திகதி இரவு 9.10 மணியளவில் இந்தச் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் 30 முதல் 39 வயதுக்கு இடைப்பட்ட இலங்கைப் பணியாளர்கள் ஆவர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த இவ்விருவரும், தமது அன்றாடப் பணிகளை நிறைவு செய்துவிட்டு தங்குமிடத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோதே இந்த எதிர்பாராத விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

எதிர்த்திசையில் பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றில் ஏற்றப்பட்டிருந்த மரத்தினால் செய்யப்பட்ட வீட்டின் கூரைப் பகுதி, வாகனத்தின் அளவைத் தாண்டி வெளியே நீட்டிக்கொண்டிருந்துள்ளது. வீதியோரமாக நடந்து சென்ற இருவரும் வெளியே நீட்டிக்கொண்டிருந்த அப்பகுதியுடன் மோதியதிலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து இடம்பெற்ற வீதியில் நடைபாதை இல்லாத காரணத்தினால், பாதசாரிகள் வீதியின் ஓரமாகவே பயணிக்க வேண்டிய பாதுகாப்பற்ற நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பாரவூர்தியின் சாரதியிடம் தென் கொரிய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வாகனத்தைச் செலுத்தும்போது முன்னால் உள்ள பகுதியை முறையாக அவதானிக்கத் தவறியமையே விபத்துக்குக் காரணம் என சாரதி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், விபத்து இடம்பெற்றபோது சாரதி மதுபானமோ அல்லது போதைப்பொருளோ பயன்படுத்தியிருக்கவில்லை என்பது மருத்துவப் பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.

தற்போது சாரதிக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பாரவூர்தியில் பொருட்களை ஏற்றும்போது உரிய பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலும் தென் கொரிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காகக் கடல் கடந்து சென்ற ராகலை இளைஞனின் அகால மரணம், அவரது குடும்பத்தினரையும் மலையக மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026

    ‘டிட்வா’ சூறாவளி ஓராண்டு நினைவு: உயிரிழந்தோருக்கு பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

    November 27, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

    November 27, 2026
    Editors Picks

    தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

    November 28, 2026

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026

    தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

    November 28, 2026

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.