
ருவன்வெல்ல பகுதியில் மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ருவன்வெல்ல – மாப்பிட்டிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் நேற்று (15) மாலை குளித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்ற சிறுவர்கள் மீதே மின்னல் தாக்கியுள்ளது.
மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவன் ருவன்வெல்ல – கோனகல பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும், காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
