இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கே 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
84 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
