கல்பிட்டி இருந்து மன்னார் நோக்கி பயணித்த அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் புத்தளத்திலிருந்து கல்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த லொரி வேக கட்டுப்பாட்டை இழந்து பஸ் உடன் நேருக்கு நேர் மோதியதில் லொரியின் சாரதி பலியாகியுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் பஸ்ஸில் பயணித்த பயணிகள் காயங்களுடன் கல்பிட்டி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை பேருந்து சாரதியும் படுகாயங்களுடன் கல்பிட்டி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லொரியில் பயணித்து மற்றும் ஒரு நபர் தீவிர சிகிச்சைக்காக குருனாகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்பிட்டி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
யூகேஷ்
