Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

August 2, 2026

கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

August 2, 2026

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

August 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையக பாடசாலை மாணவர்களுக்காக 1000 மெட்ரிக் தொன் அரிசி
இலங்கை

மலையக பாடசாலை மாணவர்களுக்காக 1000 மெட்ரிக் தொன் அரிசி

ThanaBy ThanaMay 15, 2023Updated:May 15, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
r
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலையக பகுதிகளில் உள்ள டைப் 3 ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்காக 1000 மெட்ரிக் தொன் அரிசி தாய்வான் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இந்திய தூதரக பணிப்பாளர் நாயகம் ஊடாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்றைய தினம் (15.05.2023) உத்தியோகபூர்வமாக பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

r

இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் கடந்த மார்ச் 17 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தது.

அரச சார்பற்ற நிறுவனமான ‘Good Neighbors International’ இத்திட்டத்துக்கான பங்களிப்பை வழங்கியுள்ளது.

இன்று வழங்கப்பட்டுள்ள அரிசி, மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட டைப் 3 ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு  வழங்கப்படவுள்ளது.

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, மாணவர்களின் இடைவிலகளை தடுப்பதற்காகவும், அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடனே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷவரன், தாய்வான் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இந்திய தூதரக பணிப்பாளர் நாயகம் ரிச்சட் சீ.எல். சென், பிரதி பணிப்பாளர் நாயகம் சூ-ஹெசீன் செங், ‘Good Neighbors International’ தாய்வான் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் கோ ஜெங் யாங் மற்றும் அதிகாரிகள், அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, அமைச்சின் அதிகாரிகள், புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!

    August 2, 2026

    மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் ..

    August 2, 2026
    Editors Picks

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.