ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய பெண்ணொருவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அப்பெண்ணை அழைத்துவந்தபோது அவர் உயிரிழந்துள்ளார்.
அந்த வீட்டில் தங்க மோதிரம் ஒன்று திருடினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், வீட்டின் உரிமையாளரினால் வெலிகட பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, மே 11ஆம் திகதி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவந்தபோது, திடீரென சுகயீனமடைந்த அப்பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.
பதுளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 42 வயதுடைய பெண் மூச்சுத்திணறல் காரணமாக மரணமடைந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
இந்தப் பெண் பிரபல தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரும் வர்த்தக பிரமுகருமான சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டிலேயே பணிப்பெண்ணாக பணிப்புரிந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி-Trueceylon
