ஊவா மாகாண படைவீரர் தினம் “ரணவிரு சமரும்” நிகழ்வு (16-05-2023) இன்றைய தினம் பதுளையில் அமைந்துள்ள ஊவா மாகாண படைவீரர் தூபிக்கு அருகாமையில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.

ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தின் போர்வீரர் நினைவுக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு படைவீரர் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், ஊவா மாகாண பிரதான செயலாளர் தமயந்தி பரணகம, ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி உள்ளிட்ட அதிகாரிகள், இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ராமு தனராஜா

