சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (31) இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

IMF அதிகாரி தனது விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கான வாய்ப்புகள் குறித்து பல சுற்று கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார மீட்சியைத் தடுக்கும் தடைகள் மற்றும் தாமதங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்த விவாதங்களிலும் அவர் இதன்போது கவனம் செலுத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
