மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.18.06.2023.
ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான சாமிமலை பகுதியில் உள்ள மல்லியப்பூ தோட்டத்தில் உள்ள டீசைட் பிரிவில் களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டு இருந்த ஒரு கிலோ 6500/= ரூபாய் பெறுமதியான 21 கிலோ எடை கொண்ட பொதி ஒன்றை காணவில்லை என அந்த தோட்ட முகாமையாளர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை நேற்று முன்தினம் பதிவு செய்தார்.

அனைத்து தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிப்புரையின் பேரில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிசார் மேற்கொண்ட புலன் விசாரணையை தொடர்ந்து அதே தோட்டத்தை சேர்ந்த 36 வயது உடைய சந்தேக நபரை ஒருவரை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவரால் விற்பனை செய்ய பட்ட 3.500 கிரேம் உரம் சிக்கியது.
அதனை தொடர்ந்து சந்தேக நபரை இன்று மதியம் 18.06.2023.அன்று ஹட்டன் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்த பட்டதாகவும் பதில் நீதவான் சந்தேக நபரை எதிர் வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தது உள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
