கோணவில- பமுனுவில பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சப்புகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் இராஜாங்க அமைச்சரின் இரட்டை மாடி வீட்டின் 8 கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதல் நடத்தப்பட்ட போது வீட்டில் எவரும் இருக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டை அண்மித்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமெரா காட்சிகளை அடிப்படையாக வைத்து, சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் சப்புகஸ்கந்த பொலிஸார் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
