கொழும்பில் கடந்த 44 வருடங்களாக கலைஞர் ராதா மேத்தா தலைமையில் இயங்கி வரும் புதிய அலை கலை வட்டதின் கலை இலக்கியப் பிரிவு கொழும்பு 14 -கலைமகள் பாடசாலை மண்டபத்தில் 18/06/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுக்கு கொழும்பு எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையின் அதிபர் தலைமை தாங்கினார்.நிகழ்வுக்கு பிரதம அதிதியாக புலவலர் ஹாசிம் உமரும் கலந்துகொண்டனர்.

புதிய அலை கலை வட்டதின் கலை இலக்கியப் பிரிவின் தலைவரான சனாதனன் எதிர்வரும் காலங்களில் இளையவர்களின் கலைப்படைப்புகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று தனது தொகுப்புரையில் தெரிவித்தார்.


