ஓய்வுப்பெற்ற முன்னாள் பணிப்பாளர்களுக்கு சேவைநலன் பாராட்டு விழா!
(அவிசாவளை நிருபர்)
சப்ரகமுவ மாகாணத்தில் கல்வி நிர்வாகசேவையில் சேவையாற்றி ஓய்வுப்பெற்ற முன்னாள் பிரதி மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளர்களான I. பாண்டு ரெங்கநாதன் , N. செல்வராஜ், செல்வி கலாரமணி அம்மையார் ஆகியோரின் சேவை நலனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 17ஆம் திகதி இரத்தினப்புரி புதிய நகரில் கேத்துமதி விருந்துபசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வினை சப்ரகமுவ தமிழ்பேசும் கல்வியியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. கழ்வில் அதிதிகள் வரவேற்கப்படுவதையும், இரத்தினப்புரி தமிழ் வித்தியாலய அதிபர் இருளப்பன் இரவி வரவேற்புரை நிகழ்த்துவதையும் பணிப்பாளர்கள் “இரத்தின வித்தியாபதி” நாமத்தில் கௌரவ விருது பெறுவதையும் படங்களில் காணலாம். நிகழ்விற்கு சப்ரகமுவ மாகாண தமிழ்மொழி பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரி ஆலோசகர்கள், ஆசிரியர்கள் என்போர் கலந்து சிறப்பித்தனர்.

