அனைத்து சைவ அமைப்புக்களும் வெள்ளி ஞாயிறு விடுமுறையை சிறார்கள் சரிவர ஆலய வழிபாட்டிற்கும் அறநெறிக்கும் குடும்பத்துடன செலவிடவும் பரப்புரைகளையும் பொறிமுறைகளையும் ஆரம்பிக்க வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.
அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா.நந்தகுமார் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பிலே,
நெருக்கீட்டுடனும் அறநெறி பிறழ்ந்து போதைக்கும் விபத்துக்களுக்கும் ஆளாகி வரும் இளைய சமுதாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் ஓர் அங்கமான அரச அதிபரின் தலைமைத்துவத்துடன் முன்னெடுக்கப்படும் சிறந்த வேலைத்திட்டத்தை குழப்ப சிலர் முனைந்து வரும் நிலையில் இதற்கு எவரும் இடங் கொடுக்க வண்ணம் தனியார் கல்வி நிலையங்கள் பெற்றோர் பாடசாலைகள் தொடர் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகள் கண்காணிப்பு பொறிமுறைகள் திறம்பட இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
