தியத்தலாவ வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களை ஏற்றிச் சென்ற உயிர் காவு வண்டி நோயாளர்களை வைத்தியசாலையில் இறக்கிவிட்டு மீண்டும் தியத்தலாவை நோக்கி சென்ற போது பதுளை பண்டாரவளை வீதி தோவ திக்கராவ பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் உயிர் காவு வண்டியின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் தியத்தலவை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்துக்குள்ளான உயிர் காவு வண்டியின் சாரதி, சாரதியின் இருக்கையில் இருந்து மிகவும் சிரமத்தின் மத்தியில் பொது மக்களால் வெளியில் எடுக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரதிப் களுபான தெரிவித்தார்.
ராமு தனராஜா


