Browsing: இலங்கை
இந்நாட்டு மீனவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்புரி செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் ‘தீவர சுவ சவிய’ என்ற புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த…
வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகள், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்காக மீண்டும் விடுவிக்கப்படும்
வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகளை விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்காக விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்…
அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இந்த நன்மை வழங்கப்படும். மொபிடெல் நிறுவனத்தினால் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்படும் உபகார பெகேஜை, புதிய சலுகைகளுடன் மீண்டும் வழங்க தேவையான…
அருவக்காலு குப்பை திட்டப் செயற்பாடுகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன பணிப்புரை
அருவக்காலு குப்பைத் திட்டம் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். அருவாக்காலு குப்பைத் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் நேற்று (23) நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சில அரச அதிகாரிகள் செய்யும் இவ்வாறான தாமதங்கள் மற்றும் தவறுகளினால் முதலீட்டாளர்கள் இலங்கைக்கு திரும்ப வராமல் போகலாம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சீன நிறுவனமான சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி மற்றும் சீனாவின் சவுத்வெஸ்ட் முனிசிபல் இன்ஜினியரிங் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து அருவாக்காலு குப்பை கிடங்கின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் அந்த நாடுகளுக்கு மத்தியில் தேசிய மட்டத்தில் அது பாதிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார். இத்திட்டத்தின் நிலையான செயற்பாட்டிற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை நிறைவு செய்வதற்காக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 5,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அரச நிதியைப் பயன்படுத்தாமல் தனியார் நிறுவனத்துடன் இணைந்து நிதி ரீதியாக இலாபகரமான மற்றும் நிலையான வகையில் அதனை நடத்தவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வர்த்தக மாதிரியின் கீழ் இத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஓரளவு ஈவுத்தொகையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை செலுத்துவதில் பல சிக்கல்கள் எழுந்தன. இப்பிரச்னைக்கு தீர்வு காண நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் முன்வைக்கும் பல்வேறு செலவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா இங்கு கூறினார். சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் சவுத்வெஸ்ட் முனிசிபல் இன்ஜினியரிங் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஒப் சைனா ஆகிய நிறுவனங்களுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து, இந்த திட்டத்தை அரசு-தனியார் கூட்டுறவின் கீழ் செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் திகதி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை 03 மாதங்கள் வேலைத்தளத்தில் தங்கியிருந்து செயற்திட்ட ஆபரேட்டர்களுக்கு பயிற்சியளிக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொழும்பு நகரின் திண்மக் கழிவுகளை…
நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலைய இரகுபதி நூலகத்தின் ஏற்பாட்டில் வாழ்விற்கான பேரொளி வாசிப்பு எனும் எண்ணக்கருவில் பாடசாலை மாணவர்களின் நூலக பாவனை ஊக்குவிப்பு மற்றும் திறன்சார் விருத்தி…
பொலிசார் சீருடை இல்லாமல் சிவில் சமூகத்துடன் தொடர்பாடகூடாது -வெள்ளவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு மனோ கணேசன்
வெள்ளவத்தை பொலிஸ் வலயத்தின் பசல்ஸ் ஒழுங்கை பகுதியில், இரகசிய சுற்றுவளைப்பு தேவைக்காக சீருடை அணியாமல் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், அப்பகுதியில் சிவில் கடமைகளில் ஈடுபட்டிருந்த வண. மகேஷ்வர…
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து வவுனியா…
நாளை காலை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. முன்னர் குறிப்பிட்டது போன்று ஜனவரி மாதம் முதல் DAT…
கொழும்பு செட்டித் தெரு பகுதியில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையடித்த கும்பல் கைது
கொழும்பு செட்டித் தெரு பகுதியில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையடித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.…
பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் வாகனம் கண்டுப் பிடிப்பு
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பிக்கு ஒருவரை சுட்டுக் கொலை செய்த சந்தேகநபர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் வாகனம் ஒன்று கடுவலை கொடெல்ல…