நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலைய இரகுபதி நூலகத்தின் ஏற்பாட்டில் வாழ்விற்கான பேரொளி வாசிப்பு எனும் எண்ணக்கருவில் பாடசாலை மாணவர்களின் நூலக பாவனை ஊக்குவிப்பு மற்றும் திறன்சார் விருத்தி செயற்பாடுகள் கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த செயற்பாட்டின் தொடர்ச்சியாக வாசிப்பு ஊக்குவிப்பு நிகழ்வின் மூன்றாவது அமர்வு 25.01.2023 வியாழன் அன்று காலை 10.00 மணிக்கு நூலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது. அமர்வின் வளவாளராக ஆசிரியர் செல்வநாதன் வினோத்குமார் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.
வாழ்விற்கான பேரொளி வாசிப்பு செயற்றிட்டத்திற்கான அனுசரணையினை வள்ளிதமிழ் அமுதம் குழுவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
