ஹெரோயின், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
3950 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 50 போதை மாத்திரைகளுடன் மஹியங்கனை, வில்லுப்பிட்டி வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் 7500 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த 28 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இரு சந்தேக நபர்களையும் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கானத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்
ராமு தனராஜா

