Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொழும்பில் ஆகஸ்ட் 29இல் பிரமாண்ட ‘இயுலிம்’ கொரிய கலாச்சாரத் திருவிழா: ‘1+3’ கல்வித் திட்டமும் அறிமுகம்!

August 1, 2026

ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை

August 1, 2026

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

July 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நலன்புரி விடயங்கள் சட்டமாகப்படவுள்ளன
மலையகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நலன்புரி விடயங்கள் சட்டமாகப்படவுள்ளன

ThanaBy ThanaJuly 8, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தொழில்சார் உரிமைகளையும், அவர்களுக்கான நலன்புரி சார் விடயங்களையும் பாதுகாப்பதற்கு தனியானதொரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு தொழில் அமைச்சின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைய இது தொடர்பான சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைத்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார இணக்கம் தெரிவித்துள்ளார் என இதொகாவின் உப தலைவரும், தேசிய தொழில் ஆலோசனை சபை உறுப்பினருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

நாட்டில் அமுலில் உள்ள தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனைகள், யோசனைகள் மற்றும் கருத்துகள் பல தரப்புகளிடம் இருந்தும் பெறப்பட்டன. இது தொடர்பில் தொழில் அமைச்சர் தலைமையில் கூட்டங்களும் நடத்தப்பட்டன.

இவற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச தொழில் சட்டமூலம் குறித்தான வரைவு நகல் தேசிய தொழில் ஆலோசனை சபையில் இன்று (06.07.2023) சமர்ப்பிக்கப்பட்டது.

பல பகுதிகளாக பிரிந்திருந்த தொழில்சார் சட்டங்களையும், நடைமுறைகளையும் ஒன்றிணைந்து, நாட்டில் ஒரே தொழில் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான உத்தேச வரைவு நகலே இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வரைவு நகல் தொடர்பான தமது நிலைப்பாட்டை, கருத்துகளை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய தொழில் ஆலோசனை சபை உறுப்பினர்கள் முன்வைக்க வேண்டும்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பாரத் அருள்சாமி,

” இலங்கையின் பொருளாதார வளர்சியில் பெரும் பங்களிப்பை பெருந்தோட்ட தொழிலாளர்களே வழங்கினர். எனவே, பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மற்றும் நலன்புரி விடயங்களை உள்ளடக்கிய விசேட சட்டமொன்று இயற்றப்பட வேண்டும் என இதொகாவின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதி, தொழில் அமைச்சர், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் உள்ளிட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு தற்போது வெற்றி கிட்டியுள்ளது.

தொழில் சட்டத்துக்கு புறம்பாக மேலதிக சட்டமாகவே இது அமுலுக்குவரும்.  இது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகும்.” – எனவும் பாரத் அருள்சாமி குறிப்பிட்டார்.

” கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம்மூலமே நலன்புரி விடயங்கள் பாதுகாக்கப்பட்டன. எனினும், நலன்புரி விடயங்கள் முழுமையாக தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது சட்டம் ஊடாக தொழில் தொழில் பாதுகாப்பு, நலன்புரி விடயங்களை பாதுகாக்க ஏற்பாடு இடம்பெற்றுள்ளது.” – எனவும் பாரத் அருள்சாமி குறிப்பிட்டார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

    July 31, 2026

    இன்று நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை

    July 31, 2026

    பூனாகலை – பண்டாரவளை பிரதான வீதி புனரமைப்பு: எழும் மண் தூசியால் மக்கள் பெரும் அவதி!

    July 31, 2026

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026
    Editors Picks

    கொழும்பில் ஆகஸ்ட் 29இல் பிரமாண்ட ‘இயுலிம்’ கொரிய கலாச்சாரத் திருவிழா: ‘1+3’ கல்வித் திட்டமும் அறிமுகம்!

    August 1, 2026

    ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை

    August 1, 2026

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

    July 31, 2026

    அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

    July 31, 2026

    கொழும்பில் ஆகஸ்ட் 29இல் பிரமாண்ட ‘இயுலிம்’ கொரிய கலாச்சாரத் திருவிழா: ‘1+3’ கல்வித் திட்டமும் அறிமுகம்!

    August 1, 2026

    ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை

    August 1, 2026

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.