மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.08.07.2023.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை தெய்வ கந்த தமிழ் வித்தியாலயத்தில் கணினி கடந்த 4ம் திகதி கொள்ளை அடித்து சென்றதை தொடர்ந்து அப் பாடசாலை அதிபர் அன்றைய தினம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிப்புரையின் படி மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிசார் மேற்கொண்டு வந்த புலனாய்வின்படி அப் பகுதியில் உள்ள மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
சந்தேக நபர்கள் மூன்று பேரும் முறையே16,16,19, வயது உடையவர்கள் என அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து கணனி கைப்பற்ற பட்டு இன்றைய தினம் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
