மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.12.07.2023.
பொகவந்தலாவ பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் படி பொகவந்தலாவ பொலிசார் பெற்றசோ தோட்டத்தில் மேற் கொண்ட சுற்றிவளைப்பின் போது, அதே தோட்டத்தை சேர்ந்த 25 முதல் 35 வயதுடைய ஐந்து இளைஞர்கள் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், அகழ்விற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை சந்தேக நபர்கள் ஐவரையும் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.
