மேல்மாகாணம்- கம்பஹாமாவட்டம் வத்தளை ஹேகித்த – அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
மனவமைதி தந்தெம்மை வாழவைக்கும் வேல்முருகா
மானமுடன் நாம் வாழ வழி அமைக்க கருணை செய்வாய்
தளம்பாத மனவுறுதி தந்தெமக்கு அருளவேண்டும்
ஹேகிந்த கோயில் கொண்ட சிவசுப்பிரமணிய சுவாமியே சரணம் ஐயா
மனமகிழ்வு தந்தெம்மை வாழவைக்கும் வேல் முருகா
மருட்சியின்றி நாம்வாழ வழி அமைக்க கருணை செய்வாய்
மழுங்காத மனவுறுதி தந்தெமக்கு அருளவேண்டும்
ஹேகிந்த கோயில் கொண்ட சிவசுப்பிரமணிய சுவாமியே சரணம் ஐயா
வருந் துன்பம் தடுத்தெம்மை வாழவைக்கும் வேல்முருகா
வீரமிகு வாழ்வுதனை நாம் வாழ வழி அமைக்க கருணை செய்வாய்
திறமையுடன் முன்னேறும் ஆற்றல் தந்தெமக்கு அருளவேண்டும்
ஹேகிந்த கோயில் கொண்ட சிவசுப்பிரமணிய சுவாமியே சரணம் ஐயா
வெற்றிவேல் தாங்கி நின்று வாழவைக்கும் வேல்முருகா
வேற்றுமை களைந்து நாம் வாழ வழியமைக்க கருணை செய்வாய்
வற்றாத நல்லுணர்வு தந்தெமக்கு அருளவேண்டும்
ஹேகிந்த கோயில் கொண்ட சிவசுப்பிரமணிய சுவாமியே சரணம் ஐயா
மேற்கிலங்கை குடியமர்ந்து மேன்மையுடன் வாழவைக்கும் வேல்முருகா
ஆற்றலுடன் நாம் வாழ வழி அமைக்கக் கருணை செய்வாய்
ஆதரித்து அரவணைத்து காவல் தந்தெமக்கு அருளவேண்டும்
ஹேகிந்த கோயில் கொண்ட சிவசுப்பிரமணிய சுவாமியே சரணம் ஐயா
வல்லமை தந்தெம்மை வாழவைக்கும் வேல்முருகா
நோயின்றி நொடியின்றி நாம்வாழ வழிஅமைக்கக் கருணை செய்வாய்
நொந்து மனம் வாழா நிலை தந்தெமக்கு அருளவேண்டும்
ஹேகிந்த கோயில் கொண்ட சிவசுப்பிரமணிய சுவாமியே சரணம் ஐயா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.