லிந்துலை – பம்பரகலை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
பம்பரகலை மத்திய பிரிவைச் சேர்ந்த 80 வயதான வயோதிப பெண்ணொருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஓய்வு பெற்ற நிலையில், வீட்டிலிருந்த அவர், நாட்சம்பள அடிப்படையில் தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையில், வழமைபோல இன்றைய தினம் கொழுந்து பறித்து கொண்டிருந்த போதே அவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

