மொனராகலை
வெள்ளச்சி கடை பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
மொணராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்புக்கன்
வெள்ளச்சி கடே பகுதியிலுள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மொனராகலை பொலிஸாரினால் இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் அதே பகுதியில் வசிக்கும் நாற்பத்தைந்து வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் கணவரைக் கைது செய்துள்ளனர்.
சடலம் தற்போது நீதவான் பார்வையிடுவதற்கு சம்பவ இடத்தில் உள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா

