Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்-6 பேர் உயிரிழப்பு –

August 4, 2026

கலவானை – டிப்டீன் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம்: 300 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டு விழா!

August 4, 2026

சீரற்ற காலநிலை ஐந்து மரணங்கள்-1,880 பேர் தற்காலிக இடங்களில்

August 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்
இலங்கை

நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

ThanaBy ThanaJuly 18, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே கட்டண உயர்வு இடம்பெறும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இதன் உத்தேச திட்டம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிரணிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானால் நீர் கட்டணம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இந்த கேள்வியை எழுப்பியமை தொடர்பில் முதலில் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன். நீர் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்துவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தேன்.

மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நீர்வழங்கல் துறையை நிர்வகிப்பதற்கு 425 மில்லியன் ரூபா செலவு ஏற்படுகின்றது.  இதற்கு மேலதிகமாக 2 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா கடனும் செலுத்தப்படுகின்றது. இதுவரை காலமும் முறையான நடவடிக்கை இடம்பெறாமை இதற்கு காரணமாகும். அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கையாகவே இது இடம்பெறுகின்றது.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நீர் கட்டணம் உயர்த்தப்படும். நாடாளுமன்றத்தில் நாளை (19.07.2023) ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது இது பற்றி தெளிவுபடுத்தப்படும்.

ஒரு குடும்பத்தில் ஐவர் இருந்தால் 15 முதல் 20 அலகுகள்தான் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கும், சமுர்த்தி பயனாளிகளுக்கும் நீர் கட்டண உயர்வால் தாக்கம் ஏற்படாது. நீர் கட்டண அதிகரிப்பு யோசனை எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டும் என்ற நோக்கம் எமக்கு இல்லை.

நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் அண்மையில் கூட்டமொன்றை நடத்தியிருந்தேன். இதில் எதிரணியினர் பங்கேற்கவில்லை.  அன்று இல்லாத அக்கறை இன்று திடீரென ஏன் வந்துள்ளன? தூங்குபவரை எழுப்பலாம். தூங்குபவர்போல் நடிப்பவரை எழுப்ப முடியாது.” – என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்-6 பேர் உயிரிழப்பு –

    August 4, 2026

    சீரற்ற காலநிலை ஐந்து மரணங்கள்-1,880 பேர் தற்காலிக இடங்களில்

    August 4, 2026

    புத்தளம் முதல் பொத்துவில் வரை கடற்றொழில் தடை நீடிப்பு: கடலில் மிதக்கும் 15 கொள்கலன்கள் குறித்து மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

    August 4, 2026

    கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை

    August 4, 2026
    Editors Picks

    நுவரெலியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்-6 பேர் உயிரிழப்பு –

    August 4, 2026

    கலவானை – டிப்டீன் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம்: 300 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டு விழா!

    August 4, 2026

    சீரற்ற காலநிலை ஐந்து மரணங்கள்-1,880 பேர் தற்காலிக இடங்களில்

    August 4, 2026

    புத்தளம் முதல் பொத்துவில் வரை கடற்றொழில் தடை நீடிப்பு: கடலில் மிதக்கும் 15 கொள்கலன்கள் குறித்து மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

    August 4, 2026

    நுவரெலியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்-6 பேர் உயிரிழப்பு –

    August 4, 2026

    கலவானை – டிப்டீன் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம்: 300 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டு விழா!

    August 4, 2026

    சீரற்ற காலநிலை ஐந்து மரணங்கள்-1,880 பேர் தற்காலிக இடங்களில்

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.