நோயாளர் காவு வண்டி வேன் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி ஒன்றும் பலாங்கொடை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பாரிய காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை (20/07/2023)பலாங்கொடை ஒப்பனாயக்க உடவெல அமுனுகாவ என்ற பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.மேலதிக விசாரணைகளை ஓப்பநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

