லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த தொகையை தனது தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இன்று (20) திறைசேரிக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், மக்களின் தேவையை குறைத்து நிறுவனத்தை பலப்படுத்தி சிறிதளவு இலாபம் ஈட்டியுள்ளோம் என்றார்.
அத்துடன் அதிகமாக விலை குறைப்பு செய்துள்ளோம். வரும் காலங்களில் இந்த விலையை ஒரே விலை வரம்பிற்குள் வைக்க முயற்சிப்போம். அதற்காக பல முறைகளை பயன்படுத்துகிறோம். குறிப்பாக விலை சூத்திரத்தின்படி கிடைக்கும் விலைகளுக்கு ஏற்ப, உலக சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
