மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள் 24.07.2023.
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபானசாலை அருகே ஓடும் அருவியில் இன்று காலை 10 மணியளவில் சிசுவின் சடலம் கிடப்பதை கண்ட மக்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.
அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் அங்கு பாதுகாப்பு வேலி அமைத்து சிசுவின் சடலம் பற்றி புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து ஹட்டன் நீதிமன்ற நீதிவான் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவம் இடம்பெற்றது வருகை தந்து கைரேகை கள் பதிவு செய்ய உள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் சிசு பொலித்தீன் உறையில் போடப்பட்ட நிலையில் ஓடையில் வீசப்பட்ட நிலையில் உள்ளது எனவும் சடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என கூறினார்.

