லிந்துலை போலீஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய இராணிவத்தை தோட்டத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 24 அறைகளை கொண்ட லயன் குடியிருப்பு ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தில் அனைத்து வீடுகளுக்கும் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிசார் உடன் பிரதேச மக்கள் கடுமையாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மின்சார ஒழுக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீப்பறவல் சம்பவித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெரிய இராணி வத்தை தோட்டத்தின் முதலாம் இளையத்தின் உள்ள 24 வீடுகளே இவ்வாறு தீக்கரையாகி வருகின்றன
இதுவரை 4 வீடுகள் முற்றாக தீக்கரையாகி விட்டதாகவும் எஞ்சிய வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். தீ பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மின் ஒழுக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீப்பறவல் சம்பவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
– கௌசல்யா
