கொம்பனி தெருவிலிருந்து மட்டக்குளி நோக்கி பயணிக்கும் 145 இலக்க தனியார் பஸ் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுடைய போக்குவரத்து சேவைக்கு உற்பட்ட பாதையினுடாக 274 பஸ் சேவை பயணிகளை ஏற்றி செல்வதால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு பஸ் நடத்துனர்களும் ,ஓட்டுநர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பணிபுறக்கணிப்பினால் பாடசாலை மாணவர்கள் உட்பட அன்றாடம் கடமைகளுக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஸ்ரீகாந்த்

