மூலவளங்கள் நிலையம் மற்றும் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட ஊவா மாகாண முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக் கட்டிடத் திறப்பு விழா இன்றைய தினம் (26-07-2023) ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் தலைமையில் பதுளை நகரில் அமைந்துள்ள முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தித் திணைக்கள வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
அதி மேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய மகளிர், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின், உலக வங்கியின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 13 மில்லியன் ரூபாய் செலவில், ஊவா மாகாண கட்டிடத் திணைக்களத்தின் தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசனாயக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்ஷன தெனிபிடிய, ஊவா மாகாண பிரதான செயலாளர் தமயந்தி பரணகம, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் டீ.எம்.சீ. திஸாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ராமு தனராஜா





