பத்தனை மவுனட்வேனன் தோட்டத்தில் 100 அடி பள்ளத்தில் டெக்டர் வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
விறகுகளை ஏற்றி சென்ற டாக்டர் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்தில் இருவர் தப்பித்த நிலையில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
குறித்த வாகனத்தின் ஓட்டுனரான 60 வயது மதிக்கத்தக்க எட்வர்ட் என்பவரே பலத்த காயங்களுடன் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்று ,மேலும் விபத்து நடந்த மிகவும் மோசமான பள்ளத்தாக்கான இடதுக்கு வந்ததும் மற்றைய இருவரையும் வாகனத்தை விட்டு இறங்குமாறு எட்வர்ட் சொல்லிவிட்டு வாகனத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கெளசல்யா
