மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.31.07.2023.
இன்றைய தினம் 31.07.2023.அன்று மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் புதிய அதிபராக பதவியேற்ற
அதிபர் திரு N. பரமேஸ்வரன் அவர்கள் அதிபராக நியமனம் பெற்றார்.
இவர் இதே கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வி முதல் உயர் தரம் வரை கல்வி பயின்றார்.இப் கல்லூரி மாணவரான இவர் , ஆசிரியராக , உப அதிபராக சேவையாற்றி கடந்த சில ஆண்டுகளாக ஹட்டன் கல்வி திணைக்களத்தின் கோட்டம் மூன்றில் உள்ள புளூம்பீல்ட் தேசிய பாடசாலை அதிபராக சேவையாற்றி இன்று அதிபராக மீண்டும் இக் கல்லூரி அதிபராக தனது கடமையை பொறுப்பு ஏற்று உள்ளார்.
இக் கல்லூரி வளர்ச்சிக்கு உங்களோடு என்றும் துணை நிற்போம் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்கம் கல்லூரி அபிவிருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
இக் கல்லூரி அதிபராக சேவைகள் செய்யும் இக் காலத்தில் ஹட்டன் வலய கல்லூரிகளில் முதலாவது இடத்தைப் பெற்று கொள்ள என்னால் முடிந்த வரை போராடி பெற்று கொள்ள உள்ளதாகவும் கல்லூரியில் கற்றல், போட்டிகள், விளையாட்டு மற்றும் ஏனைய சகல துறைகளிலும் சிறந்து விளங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கல்லூரியில் சகல மாணவ மாணவிகள் கல்லூரி கட்டுபாட்டுக்கு இணங்கி நடக்க வேண்டும் என தனது செய்தியில் கூறினார்.

