சீனாவின்- சினொபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் தொகை இன்று(2) நாட்டை வந்தடையவுள்ளது.
குறித்த நிறுவனத்தின் முதலாவது தொகை எரிபொருளானது கடந்த வாரம் நாட்டை வந்தடைந்ததென மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்திருந்தார்.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர், சினொபெக் நிறுவனமானது நாடு முழவதும் உள்ள 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் விநியோக பணிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 45,000 மெட்றிக்தொன் எரிபொருள் முதற்கட்டமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதென இலங்கையிலுள்ள சீன தூதரகம் டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
