சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

நேற்று இரவு 7 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து புத்தர் சந்தி பகுதியில் உள்ள பேருந்து பயணிகள் தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தினால் பயணிகள் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படாத நிலையில்,பேருந்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
