மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.08.08.2023.
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் கடும் வெப்பம் நிலவுவதால் இப் பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக மவுசாகல, காசல்ரீ, மேல் கொத்மலை, கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 49 அடி இன்று காலை 8 மணிக்கு குறைந்த உள்ளது என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடும் வெப்பம் நிலவுவதால் இப் பகுதியில் குடி நீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீர் பெற்று கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து இவ்வாறான காலநிலை தொடரும் பட்சத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கும் நிலை உருவாகலாம்.
நீர் மின் நிலைய உற்பத்திக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்கமான மவுசாகல நீர் தேக்கம் கடந்த ஆண்டு முதல் இன்று வரை மிக மிக குறைந்த நீரையே சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் தேக்க நீரை கொண்டு கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய,கலுகல ஆகிய நீர் மின் நிலைய மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது.




