மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில் மத்திய மாகாண ஆளுனரை சந்தித்து மலையக மக்களின் பிரச்சினை எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் கலந்துரையாடினார்.
அதனை தொடர்ந்து கண்டி டெவன் விருந்தகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அத்துடன் கண்டி அஸ்கிரிய மகாநாயகவிடம் ஆசி பெற்தோடு அதனை தொடர்ந்து கண்டி இந்தியா உதவி தூதுவரை சந்தித்தனர். அவரிடம் மலையக மக்களின் பிரச்சினை எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் கலந்துரையாடினார்.
அத்தோடு மலையக மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.




