கொழும்பில் இருந்து பதுளை நோக்கி தனியார் பேருந்தில் பயணித்த 30 வயதுடைய கொனகல ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஹல்துமுல்ல ஆரம்ப பாடசாலைக்கு அருகில் வைத்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று இரவு பண்டாரவளை குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்
சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேகநபரிடம் இருந்து 3250 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 790 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபான தெரிவித்தார்
குறித்த சந்தேக நபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது சந்தேக நபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்
ராமு தனராஜா
