Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

August 4, 2026

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

August 4, 2026

மலையகத்தில் நீடிக்கும் கடும் மழை: வட்டவளையில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு; மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

August 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அதிகரித்த வெப்பநிலை காரணமாக அதிகமான இயற்கை நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு வழங்குமாறு கோரிக்கை
இலங்கை

அதிகரித்த வெப்பநிலை காரணமாக அதிகமான இயற்கை நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு வழங்குமாறு கோரிக்கை

ThanaBy ThanaAugust 9, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தற்கால அதிகரித்த வெப்பநிலை காரணமாக அதிகமான இயற்கை நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு வழங்குமாறு கொழும்பு ரிட்ஜ்வே  சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் இது தொடர்பாக நேற்று முன்தினம் (07) ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், பகல் வேலையில் வெப்பநிலை அதிகரிப்பபதால் சிறுவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும். இவ்வெப்பநிலையின் போது அதிகமாக இயற்கையான நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு வழங்க வேண்டும் என விசேட சிறுவர் வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.

இளநீர், தேசிக்காய், தோடை, நாரைத் தோடை, மாதுளை, கஞ்சி போன்ற குடிபானங்களை நீரிழப்புத் தன்மையினைத் தவிர்ப்பதற்காக அவசியம் எனவும், அதிகரித்த வெப்பத்தினால் தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, அல்லது அதிகரித்த தூக்கம் ஏற்படுவதுடன் உணவுகளின் சுவை குறைதல் போன்ற நிலைமைகள் சிறுவர்களுக்கு ஏற்படலாம் என அவர் விபரித்தார்.

இவ்வாறான காலகட்டத்தில் நீர் அருந்தாது சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லுதல், விளையாடுதல் மற்றும் வீதிகளில் சுற்றித் திரிதல் போன்றவற்றால் சகலருக்கும் நீரிழப்பு நிலை மற்றும் வெப்ப அதிர்ச்சி நிலைமைகளை எதிர்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.

இக்காலப்பகுதியில் உஷ்ண அதிகரிப்பின் கீழ் சிறுவர்களுக்கு தோல் நோய் அதிகரிக்கக் கூடும் என்றும், வியர்வைக் கொப்பளங்கள், தோலில் ஈரலிப்பின்மையால் தோல் ஒவ்வாமை  போன்ற நோய்கள் ஏற்படலாம் எனவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்பதுடன் சிறுவர்களை குளிக்கச் செய்தல், ஒரு நாளைக்கு இரண்டு தடவை அல்லது குளிப்பது முக்கியம் என்பதுடன் 20 விநாடி அளவில் ஒரு தடவைக்கு நீரில் நன்றாக மூழ்கிக் குளிப்பதனால் தோல் நோய்களை குறைக்கக் கூடியதாகக் காணப்படுவதாகவும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா மேலும் சுட்டிக்காட்டினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    மலையகத்தில் நீடிக்கும் கடும் மழை: வட்டவளையில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு; மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

    August 4, 2026

    கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நோர்ட்டன் பகுதியில் பதிவு

    August 4, 2026

    மத்திய மாகாணத்தில் நாளை பாடசாலைகள் மீண்டும் திறப்பு: கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு

    August 4, 2026
    Editors Picks

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    மலையகத்தில் நீடிக்கும் கடும் மழை: வட்டவளையில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு; மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

    August 4, 2026

    கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நோர்ட்டன் பகுதியில் பதிவு

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    மலையகத்தில் நீடிக்கும் கடும் மழை: வட்டவளையில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு; மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.