Lions Club of Colombo Gold City தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் கூடாக இன்றைய தினம் தலவாக்கலை பாரதி மகா வித்யாலயா மாணவர்களுக்கு விசேட சேவை வழங்கப்பட்டது. இதன்படி தற்போது சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் அனுபவிக்கும் நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக சிறுவர் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்கள் ஏற்படும் விதம் அதற்கான குணக்குறிகள் அவற்றை தடுப்பது எவ்வாறு தேவையான சிகிச்சை வழிமுறைகள் போன்றன தொடர்பில் தெளிவான விளக்கங்களும் அதற்கான காணொளிகளும் பாடசாலை மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலையில் இடைநிலை மற்றும் உயர் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கொழும்பை மையமாகக் கொண்டு நாடக ரீதியில் பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வரும் இந்த தொண்டு நிறுவனத்தின் மற்றும் ஒரு மலையகத்திற்கான சேவையாக இன்றைய தினம் இச்சை ஏற்பாடு நடந்தேறியது.
மேலும் குறித்த இரு நோய்கள் தொடர்பான சித்திரப் போட்டி ஒன்று மாணவர்கள் இடையே நடாத்தப்பட்டு அதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டதோடு சித்திரப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு பெண் மாணவிகளுக்கான சுய சுகாதார பழக்க வழக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வுகளுடன் அவர்களுக்கான பரிசுப் பொதி ஒன்றும் வழங்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் திரு விஜயகுமாரன் அவர்களின் தலைமையின் கீழ் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பித்த இந்நிகழ்வில் Lions Club of Colombo Gold City தொண்டு நிறுவனத்தில் பின்வருவோர் கலந்து சிறப்பித்தனர்.
தலைவர் – லயன் K . சதாசிவம் ஐயா & திருமதி துஷாந்தி சதாசிவம்.
பொருளாளர் – லயன் பாலா ஸ்ரீ தரன் & திருமதி வாணி பாலா ஸ்ரீ தரன்.
மாவட்ட இணைப்பாளர் – லயன் S . செந்தில்குமார் & திருமதி பெற்றீஷியா செந்தில்குமார்.
முன்னாள் தலைவர் – லயன் N. சிவகுமார் & மைதிலி சிவகுமார்.
கிரோஷன்








