இம்முறை இடம்பெற்ற அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் 3 நு/பிறேமோர் தமிழ் வித்தியாலயத்தை சேர்ந்த செல்வன் பிரபாகரன் சர்வேஸ் பிரிவு 1 ஆக்கத்திறன் வெளிப்பாடு – கதை கூறல் போட்டியில் பங்குபற்றி பிரதேச மட்டம் மற்றும் வலய மட்டம் ஆகியவற்றில் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இது பாடசாலை வரலாற்றில் கிடைத்த முதலாவது வெற்றியாகும். வெற்றி பெற்ற மாணவனையும் அவரை பயிற்றுவித்த தமிழ் மொழித்தினப்போட்டி பொறுப்பாசிரியர் திருமதி.க. மகாலெட்சுமி அவர்களையும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம் சார்பாக உளமாற வாழ்த்துகின்றோம்.
